மதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி யுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள தாவது:
மணப்பாறையில் அரசுக் கல்லூரி வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக அமைதியான முறையில் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது 10 புதிய கல்லூரிகள் உருவாக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டது.
ஆனால், இதில் மணப்பாறை இடம் பெறாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், அறநிலையத் துறை அமைச்சரின் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள 10 கல்லூரி கள் பட்டியலிலும் மணப்பாறை இடம்பெறாதது மிகுந்த வருத் தத்தை தருகிறது.
எனவே, மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அறிவித்து, நிகழ் கல்வி ஆண்டி லேயே மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது.