Regional01

அரசு வேலையில் இட ஒதுக்கீடு: முதல்வருக்கு சிலம்ப மாணவர்கள் நன்றி :

செய்திப்பிரிவு

அரசு வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவ டிக்கை மேற்கொண்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் சிலம்ப வீரர்க ளுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜை நேற்று இந்திய சிலம்பக் கோர்வைக் கழகத்தின் சிலம்ப மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேரில் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தங் களின் நன்றியைத் தெரிவிக்கும் படி கூறினர். அதைத் தொடர்ந்து, ஆன்லைனில் தொடர்ந்து 14 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த திருச்சி சிலம்ப வீரர்கள், வீராங்கனைகளுக்கான சான்றிதழை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

இந்நிகழ்வில், சிலம்பாட்ட சங்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளர் எம்.ஜெயக்குமார், இந்திய சிலம்பக் கோர்வை கழகத் தலைவர் ஆர்.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT