Regional02

திருக்குறள் பேரவை சார்பில் - ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரிய நன்மாமணி விருது வழங்கல் :

செய்திப்பிரிவு

திருக்குறள் பேரவை சார்பில் ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.5,000 பணமுடிப்புடன் ஆசிரிய நன்மாமணி விருது வழங்கப்பட்டது.

கரூர் திருக்குறள் பேரவை, மெஜஸ்டிக் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தினவிழா திருக்குறள் பேரவைத் தலைவர் ப.தங்கராசு தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் மேலை.பழநியப்பன் வரவேற்றார். தலைவர் அகல்யா, செயலாளர் வைஷ்ணவி, பொருளாளர் ஆறுமுசாமி, ஆலோசகர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். காரைக்குடி நல்லாசிரியர் மே.செயங்கொண்டான் சிறப்புரையாற்றினார்.

ஆசிரியர்கள் செ.திலகவதி, ரா.ஜெரால்டுஆரோக்கியராஜ், ஓய்வுபெற்ற ஆசிரியைகள் குப்பம்மாள், சந்திரா ஆகிய 4 பேருக்கு ரூ.5,000 பணமுடிப்புடன் ஆசிரிய நன்மாமணி விருது வழங்கப்பட்டது. மேலும் சந்தனதுரை, மணிமொழி, தேன்மொழி, நிர்மலா, உமாச்சந்திரன், பி.காமாட்சி, வாசுகி, அ.சிவசாமி, கா.சுரேஷ், செல்வநவாஸ் ஆகிய 10 ஆசிரியர்களுக்கு ஆசிரிய நன்மணி விருது வழங்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் குப்பம்மாள், சந்திரா ஆகிய இருவரும் பரிசுத்தொகையை திருக்குறள் பேரவைக்கு திருப்பி வழங்கினர்.

என்.எஸ்.கிருஷ்ணன், கிருத்திகா, லட்சுமி, எஸ்.கார்த்திகேயன், கதிரவன், ஜெயா, க.பா.பாலசுப்பிரமணியன், ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புலவர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT