Regional02

சாத்தனூர் அணைக்கு : 498 கனஅடி நீர்வரத்து :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்்றன. குளம், ஏரி மற்றும் அணை களுக்கும் நீர்வரத்து அதிகரித் துள்ளது.

119 அடி உயரம் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 83 அடியை எட்டியது. மேலும், அணைக்கு விநாடிக்கு 498 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் 1,776 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள குப்பநத்தம், மிருகண்டாநதி அணை மற்றும் செண்பகத் தோப்பு அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது.

SCROLL FOR NEXT