Regional03

மாடிப்படியிலிருந்து விழுந்த பெண் மரணம் :

செய்திப்பிரிவு

வேலூர் சைதாப்பேட்டை தோப்பசாமி தெருவைச் சேர்ந்தவர் அபிராமி (40). இவருக்கும், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மஞ்சுநாதன் (44) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பிரசவத்துக் காக தாய் வீட்டுக்கு வந்த அபிராமிக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, தாய் வீட்டிலேயே தங்கியிருந்த அபிராமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு மாடிக்கு சென்றார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டு அங்கிருந்து அவர் தவறி கீழே விழுந்து காய மடைந்தார்.

சிகிச்சைக்காக வேலூர்அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அபிராமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT