TNadu

அகவிலைப்படி உயர்வை பரிசீலிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை :

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சங்க கால கோட்டையைக் கொண்டுள்ள பொற்பனைக்கோட்டையின் அகழாய்வு பணியை தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க முடியாது என்பதையும், அகவிலைப்படி வழங்குவதை தள்ளி வைத்திருப்பதையும் ஏற்கமுடியாது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வார்டு மறுவரையறை, முன்னேற்பாடுகளுக்காக கால அவகாசம் கோரப்படலாமே தவிர, தேர்தலை இனிமேல் தள்ளிப்போட முடியாது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களைப் பொறுத்தவரை வருமானம் குறைந்து, செலவு அதிகரித்துள்ள சூழலில் சமாளிக்கும் விதமாக நிர்வகித்து வருவது பாராட்டுதலுக்கு உரியது என்றார்.

SCROLL FOR NEXT