சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நேற்று சேலத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று சேலம் வந்திருந்தார். அவரை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு வரவேற்றார். ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், காவல் ஆணையர் நஜ்முல்ஹோடா ஆகியோரும் வரவேற்றனர்.
பின்னர், அவர் சங்ககிரி நீதிமன்றத்துக்கு சென்று அங்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, “நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார்.பின்னர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.