சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இந்த ஆண்டில் 100-வது சேர்க்கையாக சேர்ந்த மாணவருக்கு குமராட்சி வட்டார கல்வி வளமைய அலுவலர் ஜான்சன் புதிய சீருடை, புத்தக பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார். 
Regional02

சிதம்பரம் மானா சந்து நகராட்சி பள்ளியில் - 3 மாதங்களில் 100 மாணவர்கள் சேர்க்கை :

செய்திப்பிரிவு

சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 195 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையில் கடந்த ஜூன் மாதம் தீவிரம் காட்டினர்.

இந்தப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக இயற்கை சூழலுடன் செயல்பட்டு வருவதால் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் இந்தப் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். இந்த கல்வி ஆண்டில் கடந்த3 மாதங்களில் 100 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் 100-வது மாணவர் சேர்கை பள்ளியில் நடைபெற்றது. 100-வதாக சேர்ந்த மாணவருக்கு குமராட்சி வட்டார கல்வி வளமைய அலுவலர் ஜான்சன் புதிய சீருடை, புத்தக பை, சாப்பாட்டு கப், ஜாமண்டரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்துக் கூறினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, உதவி ஆசிரியர்கள் அனுராதா, பிரான்சிஸ்சேவியர், இலக்கியா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இதில் சிறப்பாக செயல்பட்டு அதிக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகள் பரிசு வழங்கினார்.

தற்போது பள்ளியில் 295 மாணவர்கள் உள்ளனர். 295 மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் இருக்கவேண்டும் ஆனால் தற்போது 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் எண் ணிக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமித்தால் பள்ளி மேலும் வளர்ச்சி அடையும்.

SCROLL FOR NEXT