Regional02

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் - மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மாட்டு வண்டி மணல் குவாரி அமைக் கக்கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த தொழிலாளிக்கு நிவா ரணம் வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தா.பழூர் கடைவீதியில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மணல் குவாரி அமைக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்த உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளி பாஸ்கர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஸ்டாலின், சிஐடியு மாநிலச் செயலாளர் ஜெயபால் ஆகியோர் பேசினர். இதில், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT