Regional02

அனுமதியின்றி பதாகை வைத்த 3 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

கரூர் வெங்கக்கல்பட்டியில் அண்மையில் ஒரு பிரிவினரின் கட்சி கொடிக் கம்பத்தை நடுவதில் பிரச்சினை ஏற்பட்டு, அக்கம்பம் அகற்றப்பட்டது. அந்த சமயத்தில், அங்கிருந்த மற்றொரு பிரிவினரின் பதாகையும் அகற் றப்பட்டது. இந்நிலையில், அகற்றப்பட்ட அந்தப் பதாகை வெங்கக்கல்பட்டியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி மீண்டும் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனபால் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியைச் சேர்ந்த குமார், சரவணன், மற் றொரு சரவணன் ஆகிய 3 பேர் மீது தாந்தோணிமலை போலீ ஸார் நேற்று வழக்கு பதிவு செய்து, அந்தப் பதாகையை அகற்றினர்.

SCROLL FOR NEXT