Regional01

ஊரக உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத் தார். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெறுவது, அவற்றை பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் உள்ளிட்ட 166 பேர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளைஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராம்லால், தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT