பாளையங்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

பாளையங்கோட்டையில் வியாபாரிகள் போராட்டம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை இணைந்து பாளையங் கோட்டை சமாதானபுரம் மார்க்கெட் பகுதி யில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்ட மிட்டிருந்தன. இதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் போலீஸாரும் அங்குவந்தனர்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முற்பட்டபோது வியாபாரிகள் சங்கத்தினர் திரண்டுவந்து, எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை காவல்துறை உதவி ஆணையர் நாகசங்கரன், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸாரும், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் மற்றும் அதிகாரிகள் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். போதிய அவகாசம் தராமல் ஆக்கிர மிப்புகளை அகற்றக் கூடாது என்று வியா பாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற காலஅவகாசம் அளிக்கப்படுவதாகவும், வரும் 8-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.

SCROLL FOR NEXT