Regional01

கரோனா தடுப்பூசி முகாமில் - சிறப்பு பரிசுகள் வழங்கல் :

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடை பெற்றது. காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டன. முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 பெண்களுக்கு சேலை, 100 ஆண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எல்இடி டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, குக்கர் போன்ற பரிசுகள் வழங்கப் பட்டன. ஏற்பாடுகளை சாரதிராம் அறக்கட்டளையைச் சேர்ந்த ராமநாதன் செய்திருந்தார்.

SCROLL FOR NEXT