வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் புழக்கத்தில் இல்லாத ரூபாய் நோட்டுகளின் கண்காட்சியை நேற்று பார்வையிட்ட பொதுமக்கள்.படம்:வி.எம்.மணிநாதன். 
Regional02

வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் - ரூபாய் நோட்டுகள் கண்காட்சி :

செய்திப்பிரிவு

வேலூர் அரசு அருங்காட்சியகத் தில் ரூபாய் நோட்டுகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஒரு தலைப்பில் பொதுமக்கள் பார்வைக்காக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான கண்காட்சியாக பொதுமக்களிடம் தற்போது புழக்கத்தில் இல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த கண்காட்சி தொடங்கியுள்ளது.

இதனை, அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் நேற்று தொடங்கி வைத்தார். ரூபாய் நோட்டுகள் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT