மக்கள் நீதிமன்ற அமர்வில், என்எல்சிக்கு நிலம் வழங்கியவருக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 
Regional02

என்எல்சிக்கு நிலம் வழங்கியோருக்கு கூடுதல் இழப்பீடு :

செய்திப்பிரிவு

என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு தங்கள் நிலங்களை வழங்கியதற்காக அரசு வழங்கும் வழிகாட்டுதல் மதிப்பைவிட கூடுதலாக இழப்பீட் டுத் தொகை வழங்க வேண்டும் என 01.01.2014-க்கு பிறகு அந்நிறுவனத்திற்கு நிலங்களை வழங்கிய வர்கள் கோரிக்கை விடுத்து வந் தனர்.

மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் என்எல்சிநிறுவனத்திற்கும், நிலம் வழங்கியவர்களுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.

அதன்படி, அந்நிலங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஏக்கருக்கு ரூ.5 லட்சம்அல்லது ரூ.6 லட்சம் தொகையை யும் சேர்த்து மொத்தத்தில் ரூ.15 லட்சம் வழங்க இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி நெய்வேலி வட்டம்-20 கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு தங்கள்52.45 ஏக்கர் பரப்பிலான நிலங்களைவழங்கிய 65 நபர்களுக்கு மொத்தம்ரூ.3 கோடியே 96 லட்சத்து 26 ஆயிரத்து 173 மதிப்பிலான காசோலை கள் வழங்கப்பட்டன. மாவட்ட நீதிபதி (ஒய்வு) நடராஜன், நெய் வேலி சார்பு நீதிமன்ற நீதிபதி சாதிக்பாட்சா ஆகியோர் பங்கேற்று காசோலைகளை வழங்கினர்.

என்எல்சி நிலத்துறை தலைமைப் பொது மேலாளர் லட்சுமி காந்த ராவ், துணைப் பொது மேலாளர் விவேகானந்தன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT