சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், எடப்பாடி அருகே தேவூர் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்பகுதியில் விவசாயிகள் பரவலாக கரும்பு பயிரிட்டிருந்த நிலையில், சூறைக்காற்று வீசியதில், கரும்புகள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டது.
எடப்பாடி அருகே உள்ள சென்றாயனூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த கரும்பு மழை, காற்றால் சேதம் அடைந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.