Regional01

ஆதரவற்ற 49 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கல் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆத ரவற்ற குழந்தைகளுக்கு நேற்று உதவித்தொகை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 49 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவின்றி உள்ளனர். இவர்களுக்கு, கல்வி, உதவித் தொகை, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.2,000 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவ லகத்தில் ஆட்சியர் கவிதா ராமு நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குணசீலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

SCROLL FOR NEXT