Regional01

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - மாநகராட்சி, நகராட்சிகள் தரம் உயர்வு தொடர்பாக இன்று விளக்கக் கூட்டம் :

செய்திப்பிரிவு

கரூர் நகராட்சியுடன் ஆண்டாங் கோவில்(கிழக்கு), ஆண்டாங் கோவில்(மேற்கு), காதப்பாறை, பஞ்சமாதேவி, ஆத்தூர், மேலப்பா ளையம், ஏமூர் ஆகிய ஊராட்சிகள், கருப்பம்பாளையம் ஊராட்சியில் உள்ள திருமாநிலையூர் கிராமம் மற்றும் புலியூர் பேரூராட்சி ஆகியவற்றை இணைத்து, கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்துதல்.

புஞ்சைபுகழூர் பேரூராட்சியு டன், தமிழ்நாடு காகித ஆலை பேரூராட்சி மற்றும் திருக் காடுதுறை, கோம்புபாளையம், நஞ்சை புகழூர் ஊராட்சிகளை இணைத்து, புஞ்சைபுகழூர் நகராட்சியாக தரம் உயர்த்துதல்.

பள்ளபட்டி பேரூராட்சியுடன் லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சியை இணைத்து, பள்ள பட்டியை நகராட்சியாக தரம் உயர்த்துதல் ஆகியவை தொடர் பாக, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கான விரிவான விளக்கக் கூட்டம் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.4) காலை 11 மணியளவில் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரி வித்துள்ளார்.

SCROLL FOR NEXT