Regional01

வங்கி கணக்கில் மோசடி நடந்தால் புகார் செய்ய வசதி :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓடிபி மூலமாகவோ அல்லது வேறுவகையிலோ மோசடியாக, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் பதற்றம் அடையாமல், மோசடி நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 155260-ல் அல்லது www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. செல்போனுக்கு வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்யக்கூடாது. அடையாளம் தெரியாத நபருக்கு ஆன்லைன் மூலம் எக்காரணம் கொண்டும் பணத்தை அனுப்ப வேண்டாம். சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்தவர்போல போலி கணக்குகளை உருவாக்கி அவசரமான செயலுக்காக (மருத்துவமனை, பள்ளி, கல்லூரி கட்டணம், வீட்டு வாடகை) பணம் கேட்டு வரும் செய்திகளை உறுதிசெய்யாமல் பணம் அனுப்பக்கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனுக்கு வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்து, வங்கி விவரங்களை பதிவு செய்யக்கூடாது.

SCROLL FOR NEXT