காவல்கிணறில் காவல்துறை சோதனைச் சாவடிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணியை சா.ஞானதிரவியம் எம்.பி., ஆட்சியர் வே.விஷ்ணு, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தொடங்கி வைத்தனர். 
Regional01

சோதனைச் சாவடிக்கு புதிய கட்டிடம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறில் காவல்துறை சோதனைச் சாவடிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம், மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. இதேபோல அடங்கார்குளம், காவல்கிணறு, தெற்கு வள்ளியூர், வள்ளியம்மாள்புரம் ஊராட்சிகளில் பேவர்பிளாக் பதிக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன. வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமயசிங் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், பிரம்ம நாயகம் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT