சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜிடம் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனைப்பட்டா கேட்டு நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினர் நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் பழனி தலைமையில் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியினர் அளித்துள்ள மனுவில், “திருவண்ணா மலை மாவட்டம் சேத்துப்பட்டு, கொழப்பலூர், நெடுங்குணம், வில்லிவனம், வேப்பம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடி யினர் மற்றும் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.
மேலும், வீட்டு மனை பட்டா கேட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஜாதிச் சான்றிதழ் கிடைக்காததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மனு கொடுத்து காத்திருக்கும் அனைவருக்கும் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர். அவர்களது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட் சியர் உறுதி அளித்துள்ளார்.