மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,871 கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்தது. தற்போது, மழை குறைந்ததால், அணைக்கு நீர் வரத்து குறையத் தொடங்கி யுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,878 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 12,871 கனஅடியானது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் 68.87 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 68.67 அடியானது.