Regional01

30 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை அருகே எதலவாடி கிராமத்தில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் 30 டன் ரேஷன் அரிசியை, இருலாரிகளில் வெளிமாநிலத்திற்கு கடத்த திட்டமிட்டிருந்தனர். இதனை நேற்று முன்தினம்டிஎஸ்பி மணிமொழியான் தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற நில உரிமையாளரான உறையூரைச் சேர்ந்த மாசிலாராணி (47), நத்தாமூர் சிவப்பிரகாசம்(29), திருக்கோவிலூர் - மொகலார் ராமமூத்தி(25), முத்து (45) மற்றும் லாரி உரிமையாளர் சக்திவேல்(33) ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT