Regional02

கடலூர் அரசு பள்ளி ஆசிரியைக்கு கரோனா :

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பள்ளியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பள்ளி வகுப்பறைகள், ஆசிரியைகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT