Regional02

ஆதிதிராவிடர்கள் : தொழில் தொடங்க ரூ.50,000 நிதியுதவி :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆதி திராவிடர் சட்டப் பட்டதாரிகள் சொந்தமாக தொழில் தொடங்க அலுவலகம், மேசை, நாற்காலி வாங்குவதற்கு மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.50,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிப்போர் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவராக 21 வயதிலிருந்து 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பார் கவுன்சில் உறுப்பினராகவும், நீதி மன்றத்தில் வழக்காடுபவராகவும் இருக்க வேண்டும். இந்த தகுதியுடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து செப்டம்பர் 14 மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT