Regional01

சதக்கத்துல்லா கல்லூரியில் தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர் களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மு. முகம்மது சாதிக் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் செய்யது முஹம்மது காஜா முன் னிலை வகித்தார். மாநகராட்சி சமாதானபுரம் நகர்நல மையம் மருத்துவர் சுகன்யா தேவி மற்றும் மருத்துவர் ரேஷ்மா தலைமையிலான குழுவினர் முகாமை நடத்தினர்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜெஸ்லின் கனக இன்பா, ஜெமி மெர்லின் ராணி, சாகுல்ஹமீது, அப்துல் ரஹ்மான், மாரியம்மாள், முகைதீன் பிள்ளை ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.

SCROLL FOR NEXT