TNadu

அமெரிக்கா செல்லவில்லை; விஜயகாந்த் துபாய்க்கு சென்றுள்ளார் : விஜய பிரபாகரன் தகவல்

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மாந்துறை கிராமத்தில் நேற்று நடந்த திருமண விழாவில் பங்கேற்றார். அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலில் வெற்றி - தோல்வி என்பது சகஜம். இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். எனவே, தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தொய்வடைந்துவிட்டது என்று கூறுவது தவறான கருத்து. ஒவ்வொரு தேர்தலிலும் நிலைமை மாறும். தோல்வியை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்கா செல்லவில்லை. துபாய்க்குத்தான் சென்றுள்ளார். அவரது உடல் நலனில் இந்தமுறை நல்ல மாற்றம் இருக்கும். திமுக அரசு இதுவரை சிறப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுவதுபோல், 6 மாத காலத்துக்குப் பிறகுதான் திமுக அரசின் செயல்பாடுகளில் எங்களது நிலைப்பாடு குறித்து கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT