பத்மராஜன் 
Regional01

தோல்விகளை சாதனையாக்கிய ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் :

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை 219 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த தேர்தல் மன்னன்

பத்மராஜன், ‘டெல்லி ரிகார்ட்ஸ் ஆஃப் புக்’-கில் அதிக முறை தேர்தலில் தோல்வியடைந்தவர் என இடம் பிடித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். இவர் கடந்த 1988-ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். இதனால், இவர் ‘தேர்தல் மன்னன்’ என அழைக்கப்பட்டு வருகிறார்.

பல்வேறு மாநில முதல்வர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட இவர் இதுவரையில் 219 முறை தேர்தலில் போட்டியிட்டபோதும், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. “ஜனநாயகம் அனைவருக்கும் சமமமானது, எளிய மனிதர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதை உணர்த்தவே தேர்தலில் போட்டியிடுவதாக” பத்மராஜன் தெரிவித்து வருகிறார்.

அதிக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்ற சாதனை பட்டியலில், ‘டெல்லி ரிகார்ட்ஸ் ஆஃப் புக்’-கில் இவரது பெயர் இடம் பிடித்துள்ளது. ஏற்கெனவே ‘லிம்கா சாதனை புத்தகத்திலும்’ இவர் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT