Regional02

தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட - அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 469 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

தருமபுரி,கிருஷ்ணகிரி, ஓசூரில் அனுமதி யின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக அதிமுக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ உட்பட 469 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல் கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணாரெட்டி, பர்கூரில் முன்னாள் எம்எல்ஏ சி.விராஜேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் உட்பட மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மொத்தம் 404 பேர் மீது போலீஸார் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரியில் 65 பேர் மீது வழக்கு

தருமபுரி நகர அதிமுக செயலாளர் பூக்கடை ரவி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், கரோனா ஊரடங்கு சூழலில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பூக்கடை ரவி உட்பட 53 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 65 நபர்கள் மீது தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT