Regional02

பழங்குடியின மீனவர்களுக்கு மீன்பிடி வலை வாங்க நிதி :

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மீனவர்களுக்கு 2020-21-ம் நிதியாண்டுக்கான அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மீன்பிடி வலை வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மீனவர்கள், ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளின் நகல்கள், சாதிச் சான்று, மீன்பிடி தொழில் செய்யும் உரிமைச் சான்று ஆகியவற்றுடன் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT