ஆரணி  பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் கவிதா. 
Regional01

ஆரணி ஏ.சி.எஸ் குழும கல்லூரிகளில் ஆர்டிஓ ஆய்வு :

செய்திப்பிரிவு

ஆரணி ஏ.சி.எஸ் குழும கல்லூரிகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆய்வு செயதார்.

தி.மலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஏ.சி.எஸ் குழும கல்லூரிகளில் கரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளுடன் வகுப்புகள் நேற்று தொடங்கின. இதனை, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா நேற்று ஆய்வு செய்து மாணவர்களிடம் பேசும்போது, ‘‘சமூக இடைவெளியை பின்பற்று வதுடன் கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும். 18 வயது நிரம்பிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டுதான் கல்லூரிக்கு வரவேண்டும்’’ என்றார்.

அப்போது, வட்டாட்சியர் செந்தில்குமார், பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, பாலிடெக்னிக் முதல்வர் ஸ்டாலின், கல்லூரி முதல்வர் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர். 

SCROLL FOR NEXT