கடலூர் மஞ்சக்குப்பம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. 
Regional01

இன்று பள்ளிகள் திறப்பு - வகுப்பறைகளில் தூய்மைப் பணிகள் :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் என 496 பள்ளிகள் இன்று (செப்.1) திறக்கப்பட உள்ளன. இதற்காக நேற்று அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்தல், கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல், பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துதல், குடிதண்ணீர் பைப்புகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து அமர வைக்க வேண்டும். தினமும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி அளிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளியில் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு வெளியிட்டுள்ள நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

SCROLL FOR NEXT