வ.உ.சி.யின் மூத்தமகன் வ.உ.சி. ஆறுமுகத்தின் மகள் செண்பகவல்லியின் கணவர் வெள்ளைச்சாமி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 
Regional02

சட்டப்பேரவையில் - வ.உ.சி. படத்தை மாற்றக்கோரி மனு :

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி. படத்தை மாற்றிவிட்டு வேறுபடத்தை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வ.உ.சி.யின் மூத்தமகன் வ.உ.சி.ஆறுமுகத்தின் மகள் செண்பகவல்லியின் கணவர் வெள்ளைச்சாமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனு விவரம்: வ.உ.சியின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த ஆட்சியின்போது தமிழக சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட வ.உ.சியின் படம் அவரது பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. எனவே, அந்த படத்தை மாற்றிவிட்டு தூத்துக்குடி வ.உ.சி. இல்லத்தில் இருப்பதுபோன்று கருப்பு வெள்ளை நிறத்தில் அவர் அமர்ந்து இருப்பது போன்ற தோற்றத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடவுள்ள நேரத்தில் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தரவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT