Regional02

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்ட் தேர்வு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், வடகரை கீழ்பிடாகை மற்றும் சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிசியோதெரபிஸ்ட் பட்டயப் படிப்பு முடித்த தகுதியுடைய நபர்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் தென்காசி ரயில் நிலையம் அருகில் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 3-ம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT