திருப்பத்தூர் அருகே மாயமான 4 வயது சிறுவனை காவல் துறை யினர் மீட்டு பெற்றோரிடம் ஒப் படைத்தனர்.
திருப்பத்தூர் அடுத்த ரங்கம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (43). பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தெய்வானை(38). இவர்களுக்கு 2 மகள்களும், பிரதீஷ் (4) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், தெய்வானை நேற்று விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றார். குழந்தைகள் பாட்டி லிங்கம்மாள் பராமரிப்பில் இருந்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் தெய்வானை வேலை முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது 2 மகள்கள் மட்டுமே இருந்தனர். மகன் பிரதீஷ் காணவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இது குறித்து கிராமிய காவல் நிலையத்தில் தெய்வானை தகவல் கொடுத்தார்.
அதன்பேரில், சம்பவ இடத் துக்கு சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி குழந்தையை தேடினர்.
அப்போது, அருகேயுள்ள ஒரு கோயிலில் சிறுவன் பிரதீஷ்மயங்கிய நிலையில் கிடந்தான். உடனே, சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரித்தபோது, இரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர் தன்னை கடத்திச்சென்றதாக சிறுவன் பிரதீஷ் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கடத்திச்செல்ல முயன்ற மர்ம நபர்கள் யார் ? எதற்காக கோயிலில் சிறுவனை விட்டுச்சென்றனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.