திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா. 
Regional03

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு - புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா வெளியிட்டார்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடை பெற உள்ள தேர்தலை முன்னிட்டு புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் மாவட்டங் களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அரசு அலுவலகங் களில் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை முன்னிட்டு வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதி பட்டியல் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளி யிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், உதவி இயக்குநர் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,579 வார்டுகள் உள்ளன. அதேபோல, திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம், மாதனூர் என மொத்தம் 6 ஒன்றியங்கள் உள்ளன. இந்த 6 ஒன்றியங்களுக்கு 125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 13 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும், 208 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1,579 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி என மொத்தம் 1,925 பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்:

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் செல்வராசு, ஊராட்சி களின் உதவி இயக்குநர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT