Regional02

தனியார் பள்ளி மீது ஆட்சியரிடம் புகார் :

செய்திப்பிரிவு

திருப்பூர் திருமுருகன் பூண்டியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் ,வஞ்சிக்கொடி. இவர்களது மகள்பாவனா, மகன் ரோகித்.திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் சிவக்குமார் பணிபுரிந்து வந்தார்.

அவிநாசியில் உள்ள தனியார் பள்ளியில் பாவனா 9-ம் வகுப்பும், ரோகித் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதற்கிடையே சிவக்குமார் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுதொடர்பாக புகார் அளிக்க,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்த சிவக்குமார் கூறும்போது, "கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால், வலது கை, கால்செயலிழந்த நிலையில் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறேன். மகன் மற்றும் மகள் படிக்கும் தனியார் பள்ளியில் கல்விக்கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதோடு மாற்றுச்சான்றிதழையும் தர மறுக்கின்றனர்.குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது" என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்கள் கூறும்போது, "இதுதொடர்பாக இன்று (ஆக.31) விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

SCROLL FOR NEXT