Regional02

கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கில் ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் சண்டக்கோழி வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் அகமத் என்பவரது மகன் இம்ரான் (22), வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். சண்டக்கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்தார். சண்டக்கோழி வாங்கிய தகராறில், கடந்த 14-ம் தேதி இம்ரானை, கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ (56), அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (30) ஆகிய 2 பேரும் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மணிமாறனை, காமன்தொட்டி - பேரிகை செல்லும் சாலையில் உஸ்தலப்பள்ளி என்னும் இடத்தில் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மார்கோவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT