Regional02

குடிநீர் குழாயை சீரமைக்கக் கோரி - சேலத்தில் பொதுமக்கள் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

சேலத்தில் சேதமான குடிநீர் குழாயை சீர் செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் அணைமேடு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொக்லைன் மூலம் சாலையை தோண்டியபோது, குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்தது.

குடிநீர் குழாயை சீர் செய்ய மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நட வடிக்கை இல்லை.இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள், பாதாள சாக்கடைபணிக்கு வந்த டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயைவிரைந்து சீரமைக்க உறுதி அளித் தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT