Regional01

வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது :

செய்திப்பிரிவு

திருச்சி அதவத்தூர் பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி வேல்(26). காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் இவர், நேற்று முன்தினம் புத்தூர் நான்குரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சக்திவேல் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின்பேரில், புத்தூர் அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் கிடைத்த தகவலின்பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அரியமங்கலம் காமராஜ் நகரைச் சேர்ந்த ரஷீத் (19), அரியமங்கலம் வேலாயுதன் தெருவைச் சேர்ந்த சஞ்சய்(19) ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT