Regional02

26 போலீஸாருக்கு பரிசு வழங்கல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்படும் போலீஸாரை வாரம்தோறும் தேர்வுசெய்து அவர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வருகிறார். கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்டதாக ஆய்வாளர்கள் முத்துராமன் (ஓட்டப்பிடாரம்), முத்து (கயத்தாறு), பத்மாவதி (நாலாட்டின்புதூர்) ஆகியோர் உள்ளிட்ட 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பாராட்டு விழா காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கி எஸ்பி பாராட்டினார்.

SCROLL FOR NEXT