Regional02

இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் 1 பெருமாள்நகரைச் சேர்ந்த சங்கர் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (20). இவர் கடந்த 28-ம் தேதி இரவு தனது நண்பரான தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தை துரை மகன் டேவிட் (23) என்பவரது வீட்டு மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். அப்போது ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இவ்விவகாரத்தில் தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் ராஜபாண்டி (21), தூத்துக்குடி 3 -வது மைல் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (எ) முத்துப்பாண்டி (21), தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் மூர்த்தி (எ) மீரான் (19), தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தை துரை மகன் டேவிட் (23), தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் மற்றும் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பரத் விக்னேஷ்குமார் (22) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT