செங்கம் அடுத்த அந்தனூர் அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மை பணியை ஆய்வு செய்த ஊராட்சிகளின் உதவி இயக்குநர் லட்சுமி நரசிம்மன். 
Regional01

பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு - வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம் : சுழற்சி முறையில் பாடங்களை நடத்த ஏற்பாடு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்ததால் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை (செப்டம்பர் 1-ம் தேதி) திறக்கப்பட உள்ளன. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,600 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சுத்தம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கல்வி நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள் தூய்மைப் படுத்தப்பட்டுள்ளன.

. திருவண்ணாமலை மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதால், 2 குழுக்களாக பிரித்து பாடத்திட்ட அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் பாடங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரு கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஆசிரியர்களை மட்டுமே அனுமதிக்க ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 85 சதவீதத் துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், கல்லூரி மாணவ, மாணவிகளும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். முகக்கவசம் அணிதல் மற்றும் கல்வி நிறுவன வளாகத் துக்குள் நுழையும்போது கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்தல், வெப்ப பரிசோதனை செய்தல் ஆகியவை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்

முதலாம் ஆண்டு மாணவர்கள்

SCROLL FOR NEXT