Regional02

ஏடிஎம் கார்டை திருடி ரூ. 1.40 லட்சம் எடுத்த பெண் கைது :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி நாச்சியார் (67). இவர் துபாயில் உள்ள தனது தம்பியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வந்தார்.

கடந்த ஜூலை 26-ம் தேதி அந்த ஏடிஎம் கார்டு காணாமல் போனது. இதைத் தொடர்ந்து அவரது வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது அருகே குடியிருக்கும் சுதாகரன் மனைவி மாரியம்மாள் (50) ஏடிஎம் கார்டை திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1.40 லட்சம் எடுத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து நாச்சியார் கேணிக்கரை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மாரியம்மாளை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT