Regional01

ஆலங்குடியில் இளைஞர் கொலை :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் செல்வகணபதி(23). இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, இரவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த செல்வகணபதியை, ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT