தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரைச் சேர்ந்தவர் மகாராஜன் (38). பால் வியாபாரியான இவர், நேற்று அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பால் விநியோகம் செய்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்ன மகாராஜன் (55) என்பவர், அரிவாளால் பால் கேன் மீது குத்தியதுடன் மகாராஜன் கழுத்திலும் வெட்டியுள்ளார்.
மகாராஜனின் தந்தை செல்லப்பாண்டியனும், மகாராஜனும் சேர்ந்து சின்ன மகாராஜனை தாக்கி யுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பனவடலி சத்திரம் போலீஸார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்று செல்லப்பாண்டியனை கைது செய்தனர்.
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மகாராஜன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸார் விசாரிக்கின்றனர்.