தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, அனைத்துதரப்பினருக்கும் தடுப்பூசி கிடைக்க அரசுஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே, பணிக்கு செல்பவர்கள் சிரமமின்றிதடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில்,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரம் தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தொடங்கப்பட்டது.
அந்த வகையில், திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 2 ஆயிரத்து 480 பேருக்குதடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக,சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், நேற்று முன்தினம் இரவு முதலே வரிசையில் பலரும் காத்திருந்தனர். அரசு மருத்துவமனை வளாகத்தில்நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், இருக்கை வசதி செய்துதர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர்.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்த நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.