Regional02

பணியின்போது அரசுப் பேருந்து நடத்துநர் மரணம் :

செய்திப்பிரிவு

தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் அருகே பந்தநல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார் (42). அரசுப் பேருந்து நடத்துநர். அரசுப்போக்குவரத்துக்கு கழகம் கும்பகோணம் 2-வது கிளையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையிலிருந்து திருப்பூர் புறப்பட்ட அரசுப் பேருந்தை ஓட்டுநர் கலாநிதி இயக்கியுள்ளார். நடத்துநராக விஜயகுமார் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென நடத்துநர் விஜயகுமார் மயங்கி சரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பேருந்தைகாங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவரை சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத் துவர்கள், மாரடைப்பால் விஜயகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT