பிள்ளைச்சாவடியில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர் கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி, பொம்மையார்பாளை யம் கடற்கரை கிராமத்தில் சுமார் 1,500 மீனவ குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். பொம்மையார் பாளையம் கிராமத்தில் கருங்கற்க ளால் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல்நீர் புகுந்து வீடுகள், படகுகள் சேதமடைந்து வருகின்றன. தங்கள்பகுதியிலும் கருங்கற்களால் தூண்டில் வளைவு அமைக் கக்கோரி பொம்மையார்பாளையம் மக்கள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் கடந்த ஏப்ரல் மாதம் மனு அளித்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூலை 15-ம்தேதி மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டு படகுகள் சேதமடைந்தன. இதுகுறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து 3 மனுக்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் நேற்று பிள்ளைச் சாவடி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கோட்டக்குப்பம் போலீஸார், வானூர் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மீனவர்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனே தீர்வு காணாவிட்டால் மீண்டும் மீனவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.