கண்டமங்கலம் அருகே நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர். 
Regional03

கண்டமங்கலம் அருகே - நாட்டுவெடிகுண்டு வீசிய 5 இளைஞர்கள் கைது :

செய்திப்பிரிவு

கண்டமங்கலம் அருகே பள்ளி புதுபட்டு கிராமத்தில் இளைஞர் ஒருவர் மீது நேற்று முன்தினம் இரவு 5 பேர் கத்தியை வீசினர். பின்னர் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாத வன் என்பவருக்கும், புதுச்சேரி முத்தியால் பேட்டையைச் சேர்ந்த பென்னரசன் என்பவருக்கும் உள்ள முன் விரோதம் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து பென்னரசன், சிவா என்ற விநோத் (22), கோட்டக்குப்பம் ஜாகீர் உசேன் (21), அஜீத் ராஜ் (21), ஷெரிப் என்ற முகமது ஷெரீப் (21) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT